
நிலையான நிதி வெகுமதிகளுக்காக உங்கள் சேமிப்பிற்கான வட்டியைச் சேமித்து சம்பாதிக்க விரும்புகிறீர்களா? எங்களின் சேமிப்புக் கணக்குகள் உங்களின் தினசரி இருப்பைப் பொறுத்து கணக்கிடப்பட்ட வட்டி விகிதங்களை உங்களுக்கு வழங்குகின்றன. இந்தக் கணக்குகள் VISA வசதியுள்ள டெபிட் கார்டுகள், டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கான POS பரிவர்த்தனை திறன், உள்நாட்டில் லங்காபேவினால் இயக்கப்பட்ட ஏ.டி.எம் இயந்திரங்கள் மற்றும் சர்வதேச அளவில் விசாவினால் செயல்படுத்தப்பட்ட ஏ.டி.எம் இயந்திரங்கள் மூலம் பணம் மீளப்பெறக்கூடிய திறன். எங்கள் LB E-Connect வசதி உங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் உங்கள் வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. அனைத்து உள்நிலையான கட்டளைகள் மற்றும் நேரடி டெபிட்கள் இலவசமாகக் கிடைக்கும். SLIPS / CEFTS பரிமாற்ற வசதிகள் உள்ளன, அதே நேரத்தில் எங்கள் LB CIM வோலட் அம்சம் டிஜிட்டல் சேமிப்புக் கணக்காகச் சேவை செய்யும் போது ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துகிறது.
Want to know more?
ஒரு கணக்கைத் திறப்பது / கணக்கை மூடுவது / வாடிக்கையாளர்களால் நிதி பரிமாற்றம் செய்வதற்கான கட்டுப்பாடுகள்
- 18 வயதுக்குக் குறைவான வயதுடைய கணக்கு வைத்திருப்பவர்கள் (மைனர்கள்) வழக்கமான சேமிப்புக் கணக்குகளைத் திறக்க அனுமதிக்கப்படுவதில்லை.
- செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு வைத்திருக்காத இலங்கையர்கள் தகுதியற்றவர் கள்
- இலங்கையில் வதிவிட விசாவை வைத்திருக்காத வெளிநாட்டவர்கள் தகுதியற்றவர்கள்
- வாடிக்கையாளரின் கோரிக்கையின் அடிப்படையில் தனிப்பயனாக்கக்கூடிய நிதி பரிமாற்றங்களுக்கான வரம்புகளை நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
- சேமிப்புக் கணக்கிற்கான குறைந்தபட்ச தொடக்க இருப்புத் தொகை ரூ. 500
- நிலையான வைப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அல்லது ‘திரி மக’ வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பு ரூ.100 உடன் திறக்கலாம்.
- CIM கணக்குகளைப் பூஜ்ஜிய இருப்புடன் கூடத் திறக்கலாம். இதற்குத் திறப்பு கட்டணம் கிடையாது.
- உங்கள் பராமரிப்புக் கட்டணங்கள் CEFTS மற்றும் SLIPS கட்டணங்கள் மற்றும் ATM பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனை கட்டணம் ஆகியவற்றிக்கு பொருந்தும்.
- அதிகபட்சம் ரூ .1,100,000.00 வரை வைப்பு காப்பீடு மற்றும் வைப்பு செய்யப்பட்டத தொகையின் அடிப்படையிலும் கிடைக்கும்.
- ஒப்பந்தச் சட்டம்
- மத்திய வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் சுற்றறிக்கைகள்
- செயலற்ற கணக்குகள் மற்றும் கைவிடப்பட்ட சொத்துக்கள் பற்றிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்
- ஒரு வருட காலத்திற்கு பரிவர்த்தனைகள் இல்லாத சேமிப்புக் கணக்குகள் செயலற்ற கணக்குகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
- செயலற்ற கணக்கை மீண்டும் செயல்படுத்த, முறையாக நிரப்பப்பட்ட செயலற்ற கணக்குச் செயல்படுத்தல் படிவத்துடன் அடையாள உறுதிப்படுத்தல் தேவை.