
அனைத்து நன்மைகள் மற்றும் தொந்தரவு எதுவும் இல்லாமல் வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் தேடுவது நமது LB CIM டிஜிட்டல் வங்கி கணக்குதான்! வசதியான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் எதிர்கால சேமிப்புக் கணக்கு, இந்த வசதி உங்கள் பரிவர்த்தனைகளை எளிமையாகவும், மென்மையாகவும், உங்கள் ஸ்மார்ட் போனிலிருந்து எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அணுகக்கூடியதாகவும் வைத்திருக்கிறது. இந்த வசதியின் மூலம், உங்கள் CIM இருப்புக்கு இப்போது 4% [ஆண்டிற்கு] கவர்ச்சிகரமான வருமானத்தைப் பெறலாம். மேலும், CIM ஐப் பயன்படுத்தி நீங்கள் சேமிக்கும் பணத்தின் இயக்கம் கணிசமாக அதிகமாக இருக்கும்.
உங்கள் CIM இருப்பு இந்த வசதிகளுக்குப் பயன்படுத்தப் படலாம்
- அனைத்து பயன்பாட்டு ரசிதுகள் / ரீலோடுகள், காப்பீட்டு தவணைகள், கடன் அட்டை ரசிதுகளை செலுத்துதல்
- லங்கா QR ஏற்றுக் கொள்ளப்பட்ட வணிகர்களிடம் பணம் செலுத்துதல்
- LB குத்தகை / கடன்களுக்கு வாடகைகள் / வட்டிகளை செலுத்துதல், தங்கக் கடன்கள்
எங்களின் LB CIM வசதியின் மூலம் உங்களின் சேமிப்பு போர்ட்போலியோ விவரங்களை உங்கள் ஸ்மார்ட் போனிலிருந்து சரிபார்க்கும் திறன் உங்களுக்கு உள்ளதுஇ எந்த நேரத்திலும்இ எந்த இடத்திலும் உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தி எந்தவொரு கட்டணமும் / நிதிப் பரிமாற்றமும் செய்யலாம் என்பதால், உங்கள் பணம் செலுத்துவதற்கு ஏ.டி.எம் இல் பணம் திரும்பப் பெற வேண்டிய அவசியமில்லை. CIM கணக்குகளைத் திறக்கப் படிவங்களை நிரப்பத் தேவை இல்லை என்பதால் உங்கள் நேரத்தைச் சேமிக்கலாம் [பூஜ்ஜிய ஆவணங்கள்] மேலும் உங்கள் வங்கிக் கணக்கை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். பணத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்து, உங்கள் சேமிப்பு நிலுவைத் தொகையைப் பயன்படுத்தி நீங்கள் செலுத்தும் எந்தவொரு கட்டணத்திற்கும் உடனடி உறுதிப்படுத்தலைப் பெறுங்கள். உங்கள் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த, இனி பாஸ்புக்குகள் தேவைப்படாது அல்லது வங்கிக் கிளைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை.
நீங்கள் ஒரு தொழில்முனைவோராக இருந்தால், இந்த வசதியை உங்கள் நடப்புக் கணக்காகவும் பயன்படுத்தலாம் [மீதமுள்ள தொகைக்கு 4% (ஆண்டிக்கு) வட்டியைப் பெறும்போது]. உங்களுக்கு இனி காசோலைகள் அல்லது காசோலை புத்தகங்கள் தேவையில்லை, இது உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும்.உங்கள் அனைத்துப் பணம் செலுத்துதலுக்கும் உங்கள் CIM சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்தவும், அவற்றைக் கண்காணிக்கவும். பரிவர்த்தனை வரலாற்றுடன் உங்கள் மின்-அறிக்கையும் உங்களுக்குக் கிடைக்கும். CIM இலங்கை மத்திய வங்கியினால் வகுக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு தரங்களுக்கும் முழுமையாக இணங்குகிறது, மேலும் உங்கள் பணம் மத்திய வங்கியின் வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது, இது உங்களது பரிவர்த்தனைகளை எளிதாகவும் நம்பிக்கையுடனும் செய்வதற்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான வழியாகும்.